அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019, சென்னை .
Arulmigu Thiyagaraja Swamy Temple, Thiruvottiyur, Chennai - 600019, Chennai District [TM000081]
×
Temple History
தல பெருமை
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மன் கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றிஎடுத்தார். அந்த வெப்பநீர் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் ஏற்பட்டது. மற்றொரு புராணமாக சிவபெருமான் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு, இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு இலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக்...முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மன் கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றிஎடுத்தார். அந்த வெப்பநீர் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் ஏற்பட்டது. மற்றொரு புராணமாக சிவபெருமான் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு, இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு இலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்க நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலைக் குறித்த பழமையான தல புராணம் வடமொழியில் எழுதப்பட்டது. இதனை தமிழில் தருமபுர ஆதினம் திருவொற்றியூர் தலபுராணம் என எழுதியதாகக் குறிப்பிடுகின்றார். காஞ்சிபுர சபாபதி முதலியார் என்பவரும் திருவொற்றியூர் புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். மேலும் இத்தலைத்தைப் பற்றி சிவாநந்தயதிந்திர சுவாமி எழுதிய திருவொற்றியூர் ஸ்தல புராண சாரம் என்னும் நூலும் இராமநதம் பிள்ளை எழுதிய திருவெற்றியூர் ஸ்தல புராணமும் குறிப்பிடத்தக்கவை.
இலக்கிய பின்புலம்
ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்ட சிறப்புடையத்தலம். ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பிய பொழுது, அரசனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உபமன்யு முனிவரிடத்து சிவ தீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், படம்பக்கநாதர் என்ற...ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்ட சிறப்புடையத்தலம். ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பிய பொழுது, அரசனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உபமன்யு முனிவரிடத்து சிவ தீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், படம்பக்கநாதர் என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தல மரமான மகிழமரத்தின் முன்னால், நான் உன்னைப் பிரியேன் என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண் பார்வையை இழந்தார். வட்டப்பாறை அம்மன் (காளி) சந்நிதி இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க்கரும்பு இனித்த இடம் இஃது ஆகும் ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய (அவர்கோயில் உள்ள) இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு. கலிய நாயனாரின் அவதாரத் தலம்.