வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத்திகழ்கிறது. மேலும், அடர்த்தியானமக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின் முதன்மைப்பகுதியாக உள்ள திருவொற்றியூரில், வடிவுடைஅம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞானசக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடைஅம்மன், தனதுபக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள்புரிகிறார். மேலும், நாள்தோறும், உச்சிகால பூஜையின் போது, சிவப்புநிறச்சேலைஉடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப்படைக்க, பக்தர்கள்வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள்புரிகிறார். பூலோகத்தில், முதன் முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக்கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரீஸ்வரர் (சிவபெருமானின் முதல்வடிவம்) என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில், மூலவர் திருவாரூர் தியாகேசரை ஒத்திருப்பதால், தியாகராஜசுவாமி என அழைக்கப்படுகிறார். திருக்கோயில் அதன் பழமைத்தன்மைமாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆலயத்திற்குள்நுழையும்போதே, தெய்வீகமயமான அமைதியான சூழல் நம்மைவரவேற்பதை உணரமுடிகிறது. மேலும்,...
06:00 AM IST - 12:00 PM IST | |
04:00 PM IST - 08:30 PM IST | |
12:00 PM IST - 04:00 PM IST | |
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். செவ்வாய்கிழமை, பிரதோஷம் தினங்களில் மாலை 3.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். பிரதிவாரம் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்து இருக்கும். |